அதுவே, கைகலப்பாக மாறியுள்ளது. அதனை கண்ட வரதனின் அப்பா ராஜூ (50). அங்கு வந்து நேதாஜியை தட்டிக்கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த நேதாஜி அருகில் இருந்த மரக்கட்டையை எடுத்து வரதனின் அப்பா ராஜூ மண்டையில் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டார். மண்டை உடைக்கப்பட்ட ராஜூ செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்நிலையில் தனக்கு நடந்த சம்பவம் குறித்து பாலூர் காவல்நிலையத்தில்ராஜூ புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், நேதாஜி மீது வழக்கு பதிவு செய்த பாலூர் போலீசார் நேதாஜியை கைது செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post மரத்தை வெட்டிய தகராறு முதியவருக்கு மண்டை உடைப்பு: வாலிபர் கைது appeared first on Dinakaran.