பள்ளிப்பட்டில் வீட்டில் நகை கொள்ளை: 4 பேர் கைது

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை அடித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். பள்ளிப்பட்டு பேரூராட்சி சித்தூர் சாலையில் வசித்து வருபவர் சிவாஜி (36). இவர் குடும்பத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். மறுநாள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்ததில் பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த நகை திருடப்பட்டு இருந்ததால் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக சிவாஜியின் மனைவி ராதா பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

வழக்கு பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோ உதவியுடன் கொள்ளையர்கள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினார். அதில், பள்ளிப்பட்டு ஆஞ்சநேய நகரை சேர்ந்த சேகர் (41), பெருமாள் (50), கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜோசப் (எ) பிரசாத் (39), ஆந்திர மாநிலம் நாராயணவனத்தை சேர்ந்த பாக்யராஜ் (42) ஆகிய 4 பேர் கூட்டாக சேர்ந்து பூட்டியிருந்த வீட்டை நோட்டமிட்டு கொள்ளையடித்தது தெரியவந்தது. அவர்களிடம் ஏழே கால் சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டு 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.

The post பள்ளிப்பட்டில் வீட்டில் நகை கொள்ளை: 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: