மாவட்ட பேரவை கூட்டம்

 

சிவகங்கை, டிச.17: சிவகங்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவை கூட்டம் நடைபெற்றது. ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சாத்தையா தீர்மானங்களை விளக்கி பேசினார். இதில் மாவட்ட துணைச் செயலாளர்கள் மருது, கோபால் மாவட்ட பொருளாளர் மணவாளன், நகரச் செயலாளர் சகாயம், துணைச் செயலாளர் பாண்டி ஆட்டோ சங்க நகர செயலாளர் பாண்டி, ஒன்றிய செயலாளர்கள் சின்னக்கருப்பு மாதவன், ஊராட்சி மன்ற தலைவர் மலைச்சாமி மாவட்ட குழு உறுப்பினர்கள் சந்திரன், லட்சுமணன், மாதர் சங்க பொறுப்பாளர்கள் குஞ்சரம்காசிநாதன், ராஜேஸ்வரி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் நியமனம் செய்ய வேண்டும். பணி நேரத்தில் மருத்துவர் இல்லாத நிலையை ஆய்வு செய்ய வேண்டும். முந்தைய அரசு மருத்துவமனை எதிரே நகர் பகுதியில் நடுவே உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றிட வேண்டும். அண்ணாமலை நகர் வாணியங்குடி பகுதிகளில் உடனடியாக புறகாவல் நிலையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post மாவட்ட பேரவை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: