அரியலூரில் மக்கள் குறைதீர் கூட்டம்

 

அரியலூர், டிச. 17: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ‘மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்’ மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 389 மனுக்கள் கலெக்டரிடம் வழங்கப்பட்டது.

இந்த மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post அரியலூரில் மக்கள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: