குறிப்பாக 14,000 கோடி ரூபாய் ஐபோன்கள் ஒரே மாதத்தில் ஏற்றுமதியாகியுள்ளன. முதன் முறையாக ஒரு மாதத்தில் ஆப்பிள் நிறுவனம் ஏற்றுமதி செய்த மொத்த ஐபோன்கள் 80% இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகி உள்ளது. இதன் மூலம் உற்பத்தி அடிப்படையில் ஒன்றிய அரசு வழங்கும் ஊக்கத்தொகை பெற மொத்தம் உற்பத்தியில் 70% முதல் 75% வரை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற சாதனையை ஆப்பிள் நிறுவனம் தாண்டியுள்ளது. ஸ்மார்ட் போன் ஏற்றுமதியில் தமிழ்நாட்டில் உள்ள பாக்ஸ்கான் ஆலையை தனிப்பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது. ஸ்மார்ட் போன் ஏற்றுமதியில் புதிய சாதனை படைத்ததன் மூலம் ஒட்டுமொத்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
The post ஐபோன் ஏற்றுமதியில் அதிரடி சாதனை.. இந்தியாவில் ஒரே மாதத்தில் ரூ.20 கோடி ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதி..!! appeared first on Dinakaran.