மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,343 புள்ளிகள் சரிந்து 77,875 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்தது. இந்த வாரத்தில் நான்கு நாட்களுமே பங்குச்சந்தை சரிவில் இருந்த நிலையில், இன்று ஐந்தாவது நாளாகவும் பங்குச்சந்தை சரிந்து உள்ளது. எனவே, இந்த வாரம் முழுவதுமே பங்குச்சந்தை சரிந்து பெரும் நஷ்டத்தை உண்டாக்கிய நிலையில், முதலீட்டாளர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த நான்கு நாட்களாக இந்திய பங்குச்சந்தை சரிந்து வரும் நிலையில், இன்றும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,343 புள்ளிகள் சரிந்து 77,875 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்தது. வர்த்தகம் தொடங்கியதில் இருந்து சரிவுடன் காணப்பட்ட பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 1.6% வரை வீழ்ச்சி அடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 414 புள்ளிகள் சரிந்து 23,537 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்தது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 28 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகின்றன. வங்கித்துறை, வாகன தயாரிப்பு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்து தொழில் நிறுவனங்களின் பங்குகளும் விலை குறைந்துள்ளன. அமெரிக்காவில் பெடரல் வங்கியின் வட்டி விகிதம் மாற்றம் காரணமாகவே உலகம் முழுவதும் பங்குச்சந்தை சரிந்து வருவதாக கூறப்படுகிறது.
The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,343 புள்ளிகள் சரிந்து 77,875 புள்ளிகளாக வீழ்ச்சி appeared first on Dinakaran.