ராமநாதபுரம், டிச. 16: ராமநாதபுரம், கடலாடி, முதுகுளத்தூர், சாயல்குடி மற்றும் திருஉத்தரகோசமங்கை பகுதியில் பவுர்ணமியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் அம்மன் கோயில்களில் திருவிளக்கு பூஜை நடந்தது. திருக்கார்த்திகை மூன்றாம் நாள் சிறப்பு பவுர்ணமியை முன்னிட்டு, திருஉத்தரகோசமங்கை சுயம்பு மகா வராஹி அம்மனுக்கு பால், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல வகை சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.
ராமநாதபுரம் மாரியம்மன், ரயில்பாலம் வெட்காளியம்மன், அக்கிரமேசி கிராமத்திலுள்ள வாலேஸ்வரி அம்மனுக்கு மஞ்சள், பால் உள்ளிட்ட பல வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனை போன்று கடலாடி ராஜராஜேஸ்வரி அம்மன் மற்றும் பாதாளகாளி அம்மனுக்கு மஞ்சள், பால், மஞ்சள், தேன் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மாலையில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது.
ஆப்பனூர் அரிநாச்சிஅம்மன், மேலக்கிடாரம் உய்யவந்தம்மன், பூங்குளம் சேதுமாகாளிம்மன், கடலாடி பத்திரகாளியம்மன், காமாட்சியம்மன், சந்தனமாரியம்மன், ஏ.புனவாசல் உய்வந்தம்மன், சாயல்குடி அருகே உள்ள காணிக்கூர் பாதாளகாளியம்மன், மேலக்கொடுமலூர் குமரன், முதுகுளத்தூர் சுப்ரமணியர், வழிவிடு முருகன், சாயல்குடி அருகே கூரான்கோட்டை தர்மமுனீஸ்வரர் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயம் உள்ளிட்ட கோயில்களில் திருவிளக்கு பூஜையும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. இதனை போன்று கிராமங்களில் உள்ள பல்வேறு குலதெய்வ கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடு நடந்தது. கோயில்களில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
The post மாவட்ட கோயில்களில் பவுர்ணமி திருவிளக்கு பூஜை appeared first on Dinakaran.