கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் இரவு பகலாக மழை நீர் வெளியேற்றம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பகுதியில் 15 வார்டுக்கு உட்பட்ட கோட்டக்கரை, ரெட்டம்பேடு சாலை, விவேகானந்த நகர், மா.பொ.சி, தபால்தெரு, மேட்டு தெரு, வெட்டுகாலனி, திருவள்ளூர் நகர், காட்டுகொள்ளை தெரு, காந்தி நகர், சரண்யா நகர், வள்ளியம்மை நகர், கும்மிடிப்பூண்டி பஜார், ரயில்வே ஸ்டேஷன் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் மேற்கண்ட பேரூராட்சி பகுதிகளில் கனமழை பெய்தது.

இதனால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி கால்வாயில் சென்று நிலையில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மன்ற திமுக தலைவர் சகிலா அறிவழகன் உத்தரவு பேரில், அனைத்து கவுன்சிலர்களும் பணியாளர்களைக் கொண்டு குப்பை அள்ளுதல், மழைநீர் அகற்றுதல் பல்வேறு பணிகளை ரெட்டம்படு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக ஐந்தாவது வார்டு திமுக கவுன்சிலர் சி.கருணாகரன் வார்டுக்குட்பட்ட எம்.எஸ்.ஆர். கார்டன், சாய் கிருபா நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் தாழ்வான பகுதிகள் என்பதால் மழை நீர் வடியாமல் அங்கேயே தேங்கி இருந்தது.

இந்த மழை நீரை டிராக்டர் இன்ஜின் மூலம் கவுன்சிலர் கருணாகரன் மழை நீரை தொடர்ந்து பைப் வழியாக வெளியேற்றி வருகின்றனர். மேலும் நான்காவது வார்டு கவுன்சிலர் எஸ்.டி.டி ரவி கோட்டக்கரை காமராஜர் தெரு பகுதியில் உள்ள மழைநீரையும் இன்ஜினை வைத்து மழை நீரை வெளியேற்றி வருகின்றனர். மேலும் அனைத்து வார்டுகளிலும் ஆய்வு மேற்கொண்டு கொசுக்கள் உருவாகாமல் தடுக்கும் வகையில் கொசு மருந்து அடிக்கும் பணியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

The post கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் இரவு பகலாக மழை நீர் வெளியேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: