திருப்போரூர் பேரூராட்சியில் உள்ள கழிப்பறைகளை சீரமைக்க கோரிக்கை

திருப்போரூர்: திருப்போரூர் பேரூராட்சியில் பேருந்து நிலையம், மாணவியர் விடுதி, திருவஞ்சாவடி தெரு, மீன் மார்க்கெட், கண்ணகப்பட்டு, காலவாக்கம் ஆகிய இடங்களில் பொது கழிப்பறைகளை பேரூராட்சி நிர்வாகம் கட்டி பராமரித்து வருகிறது. இது தவிர திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக இரண்டு இடங்களில் கழிப்பறைகளை பேரூராட்சி நிர்வாகம் கட்டிக் ெகாடுத்து அவற்றை மட்டும் கோயில் நிர்வாகம் பராமரித்து வருகிறது. இவற்றில் பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறை மட்டும் ஏலம் விடப்பட்டு பணியாளர்கள் மூலம் தினசரி சுத்தம் செய்யப்படுகிறது. ஆனால், மீன் மார்க்கெட், கண்ணகப்பட்டு நீதிமன்றம், திருவஞ்சாவடி தெரு, மாணவியர் விடுதி ஆகிய இடங்களில் உள்ள கழிப்பறைகள் பேரூராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் இவற்றின் கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே இருக்கும் குழாய்கள், கழிப்பறை உபகரணங்கள் உடைந்து உள்ளே நுழையவே முடியாத அளவிற்கு உள்ளன. திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு கிருத்திகை, கந்தசஷ்டி, பிரம்மோற்சவம் உள்ளிட்ட திருவிழா நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். கோயில் பகுதி மட்டுமின்றி பல்வேறு இடங்களிலும் உள்ள கழிப்பறைகள் தூய்மையாக பராமரிக்கப்பட்டால்தான் அவற்றை பொதுமக்கள் பயன்படுத்த இயலும். பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைக்கு மட்டும் பணியாளர் இருந்தாலும் அந்த கழிப்பறை சுத்தமாகவும், முறையாக பராமரிக்கப்படாமலும் இருப்பதாக பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் உள்ளதால் உள்ளூர் பொதுமக்கள் இந்த கழிப்பறைகளை பயன்படுத்துவது இல்லை. ஆகவே, தேவையில்லாத இடங்களில் உள்ள கழிப்பறைகளை அகற்றிவிட்டு வேறு பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தலாம் என்ற கருத்தையும் சிலர் முன் வைக்கின்றனர். ஆகவே, பேரூராட்சி நிர்வாகம்தான் இதில் முடிவெடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

The post திருப்போரூர் பேரூராட்சியில் உள்ள கழிப்பறைகளை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: