உச்ச நீதிமன்றம் கண்டித்தும் கூட புல்டோசர் கலாச்சாரம் குறைந்தபாடில்லை. தன் அரசியல் பசிக்கு பாபர் மசூதியை போன்று இஸ்லாமிய வழிபாட்டு தலங்களை தொடர்ந்து குறிவைத்து வருகிறது. மசூதியை இடிக்க நினைத்தது, இது ஒரு திட்டமிட்ட மதவெறி செயலாகவே பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை கேள்விக்குள்ளாக்கும் இத்தகைய செயல்களை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். எந்த மதத்திற்குரிய வழிபாட்டு தலங்களாக இருந்தாலும், அதன் வரலாறும், பாரம்பரியமும் சமூகத்தின் அடையாளமாகவும் கலாச்சாரமாகவும் உள்ளது. இதுபோன்ற இடங்களை அழிக்க முயல்வது, இந்தியாவின் இறையாண்மையையும், மதசார்பின்மையையும் சமூகத்தின் ஒருமைப்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post உ.பி.யில் பழமையான மசூதியை இடித்து பாஜ மதவெறுப்பு அரசியலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது: தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் appeared first on Dinakaran.