இந்த வகையில் இந்த மாதத்திற்கான லோக் அதாலத் நேற்று தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நடைபெற்றது. இந்த லோக் அதாலத்தில் எளிதில் தீர்க்க கூடிய, சமரசமாக பேசி முடிக்க கூடிய வழக்குகள், செக் மோசடி வழக்குகள், விபத்து காப்பீடு வழ்ககுகள், ஜீவனாம்சம் வழக்குகள், மற்றும் சிவில் வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. இதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் 8 அமர்வுகளும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 4 அமர்வுகளும் அமைக்கப்பட்டிருந்தது.
அதுமட்டுமல்லாமல் மாவட்ட நீதிமன்றங்கள், தாலுகா அளவிலான நீதிமன்றங்கள் என மொத்தம் 484 அமர்வுகளில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 82,257 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ. 579 கோடியே 32 லட்சத்து 56,503 பைசல் செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறு வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்த லோக் அதாலத்தில் 1355 வாகன விபத்து வழக்குகள் விசாரிக்கப்பட்டு 1032 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ.54 கோடியே 46 லட்சத்து 90388 பைசல் செய்யப்பட்டது.
The post தமிழகம் முழுவதும் லோக் அதாலத் 82,257 வழக்குகளை விசாரித்து தீர்வு: ரூ.576.32 கோடி பைசல் appeared first on Dinakaran.