மேட்டூர் நீர்மட்டம் 117 அடியானது

மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில், நேற்று முன்தினம் விநாடிக்கு 7,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 8,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 6,384 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 6198 கனஅடியாக சரிந்துள்ளது.

வரத்தை காட்டிலும், நீர் திறப்பு குறைவாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 117.31 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 117.57 அடியானது. நீர் இருப்பு 89.64 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் பகுதியில் நேற்று முன்தினம் 13.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

The post மேட்டூர் நீர்மட்டம் 117 அடியானது appeared first on Dinakaran.

Related Stories: