கம்பம் நகர் மன்ற கூட்டம் தீர்மானங்கள் நிறைவேற்றம்

 

கம்பம் டிச. 13: தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் நகர் மன்ற கூட்டம் நடந்தது. நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை வகித்து, தீண்டாமை உறுதிமொழி வாசித்தார். பின்னர் தலைவர் கூட்டப்பொருள் வாசித்தார். இதற்கு அதிமுக கவுன்சிலர்கள் மூவர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கு திமுக கவுன்சிலர்களான சம்பத்குமார், சாதிக் ஆகியோர் கண்டனம் தெரிவித்து, தலைவரை கூட்டப்பொருளை வாசிக்கும்படி கூறினர். அப்போது தலைவர் கூட்டப்பொருள் வாசித்து முடித்த பிறகு தங்களது கேள்விகளுக்கு பதில் அளிப்பதாக தெரிவித்தார். பின்னர் நகர்ப்புறங்களை கம்பம் நகராட்சியுடன் இணைப்பது உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் துணைத்தலைவர் சுனோதா செல்வகுமார், ஆணையாளர்(பொ) பார்கவி, பொறியாளர் அய்யனார் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அம்ரூத் திட்டத்தில் ஊராட்சிபகுதிகளை நகராட்சியுடன் இணைக்க ஆட்சேபனை தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கம்பம் நகர செயலாளர் லெனின் தலைமையில் ஆங்கூர்பாளையம், நாராயணத்தேவன்பட்டி,சுருளிப்பட்டி ஊராட்சியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், நகர்மன்ற தலைவரிடம் மனு அளித்தனர்.

The post கம்பம் நகர் மன்ற கூட்டம் தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: