வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் குண்டாசில் கைது

திண்டுக்கல், டிச. 13: திண்டுக்கல் தாடிக்கொம்பு அருகே மோகன் என்பவர் அணிந்திருந்த தங்கசெயினை சுள்ளான் மாதவன் (25) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி பறித்து சென்றார். இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவு செய்து பதுங்கியிருந்த சுள்ளான் மாதவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவரின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் பரிந்துரையின் பேரில், கலெக்டர் பூங்கொடி குண்டர் சட்டத்தின் கீழ் சுள்ளான் மாதவனை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து திண்டுக்கல் தாலுகா போலீசார் சுள்ளான் மாதவனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

The post வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் குண்டாசில் கைது appeared first on Dinakaran.

Related Stories: