நித்திரவிளை அருகே பைக் மோதி சிறுமி படுகாயம்

நித்திரவிளை, டிச. 13: நித்திரவிளை அருகே பூத்துறை கூட்டப்பனவிளாகம் பகுதியை சேர்ந்தவர் இக்னேசியஸ். மீன்பிடி தொழிலாளி. அவரது மகள் லினா மரியா(6). பூத்துறை காருண்யபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் வகுப்பு முடிந்து வீட்டுக்கு செல்ல சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த பகுதி வழியாக அதிவேகமாக வந்த பைக் மாணவி மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்து திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மாணவி சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து பைக்கை ஓட்டி வந்த நபரை தேடி வருகின்றனர்.

The post நித்திரவிளை அருகே பைக் மோதி சிறுமி படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: