சமூக வலைதளங்களில் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பதிவிட்ட நபர் கைது

சென்னை: கடந்த 4ம் தேதி மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில், X (Twitter) மற்றும் Instagram ஆகிய சமூக வலைளதங்களிலும், Signal App என்ற செல்போன் செயலியிலும், ஒரு குறிப்பிட்ட நபர் குழுக்களை ஆரம்பித்து அதில் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதாகவும், மேலும், அக்குழுவில் உள்ள மற்ற ‘நபர்கள் மேற்படி ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பல சமூக வளைதளங்களில் பகிரப்பட்டு வருவதாகவும், மேற்படி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டிருந்ததின்பேரில், மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் (West Zone Cyber Crime Police Station) வழக்கு பதிவு செய்து புலன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவின் பேரில், மேற்கு மண்டலம் சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மேற்கண்ட எதிரியின் X (Twitter) மற்றும் Instagram ஆகியவற்றின் ID, Account Creator மற்றும் IPDR விவரங்களை கொண்டு விசாரணை செய்ததில், எதிரி தெலுங்கானா மாநிலத்தில் உள்ளது தெரியவந்தது.

அதன்பேரில், காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் தெலுங்கானா மாநிலம் சென்று, அங்கு பதுங்கியிருந்த எதிரி வெங்கா ரகுநாத் ரெட்டி ஆ/வ.22 த/பெ.தேவேந்தர் ரெட்டி, மல்லாபூர் உப்பால் நியூ பவானி நகர் ரங்காரெட்டி மாவட்டம், தெலுங்கானா மாநிலம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட எதிரி வெங்கா ரகுநாத் ரெட்டி விசாரணைக்குப் பின்னர், நேற்று (09.12.2024) சென்னை, உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில், ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

The post சமூக வலைதளங்களில் குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பதிவிட்ட நபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: