இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது குறித்து முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘இந்திய அணி வலுவான பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தவில்லை. இதற்கு வரும் டெஸ்ட் போட்டிகளில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணம் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தது தான். ஒரு இன்னிங்ஸில் 300 முதல் 350 ரன்கள் வரை பேட்ஸ்மேன்கள் எடுத்துக் கொடுத்தால் மட்டுமே, பவுலர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி எதிரணியின் விக்கெட்டுகளை சாய்க்க முடியும். பந்துவீச்சில் இந்திய அணி மோசமாக உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை’’ என்றார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் வரும் சனிக்கிழமை தொடங்க உள்ளது.
The post வெற்றி வசப்பட வலுவான பார்ட்னர்ஷிப் அவசியம்: இந்திய அணிக்கு ஹர்பஜன் அட்வைஸ் appeared first on Dinakaran.