வெஸ்ட்இண்டீசை ஒயிட்வாஷ் செய்ய வெற்றியை தொடருமா இந்தியா: இன்று 3வது ஒருநாள் ஆட்டம்

வதோரா: இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணி தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. முதலில் நடந்த டி20 தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இப்போது ஒருநாள் தொடரிலும் ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி அசத்தி வருகிறது.

முதல் ஆட்டத்தில் 211 ரன் வித்தியாசத்திலும், 2வது ஆட்டத்தில் 115ரன் வித்தியாசத்திலும் வென்றது. அதனால் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையை வகிப்பதுடன், தொடரையும் கைப்பற்றியது. இந்நிலையில் 3வது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் இன்று நடக்கிறது. பகல்/இரவு ஆட்டமாக நடைபெறும் இந்த ஆட்டத்தில் ஆறுதல் வெற்றியை வசப்படுத்த ஹெய்லி மேத்யூஸ் தலைமையிலான வெ.இ பெண்கள் அணி கூடுதல் முனைப்புக் காட்டும்.

நடப்புத் தொடரில் சதம் விளாசிய ஹெய்லி இந்த ஆட்டத்திலும் அதிரடியை தொடரக் கூடும். அதற்கு துணைக் கேப்டன் ஷெமைன் கேம்பெல், குயனா ஜோசப், ரஷதா வில்லியம்ஸ் என மற்ற வீராங்கனைகளும் துணை நின்றால் வாய்ப்பு உண்டு. ஆனால் இந்தியாவின் அதிரடி வீராங்கனைகள் ஹர்லீன் தியோல், ஸ்மிரிதி மந்தானா, பிரதிகா ராவல், ஜெமீமா ரோட்ரிக்ஸ், ரேணுகா சிங், தீப்தி சர்மா என பெரும்படையை மீறி சாதிக்க வேண்டும். அதனால் இன்றைய ஆட்டத்திலும் இந்தியா வென்று, வெஸ்ட் வெண்டீஸ் பெண்கள் அணியை ஒயிட்வாஷ் செய்யும் வாய்ப்புகள் அதிகம்.

The post வெஸ்ட்இண்டீசை ஒயிட்வாஷ் செய்ய வெற்றியை தொடருமா இந்தியா: இன்று 3வது ஒருநாள் ஆட்டம் appeared first on Dinakaran.

Related Stories: