ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலிக்கு 20% அபராதம் விதிப்பு..!!

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலிக்கு 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தலா ஒரு வெற்றியை பெற்றன.

ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது. இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் மெல்போர்னில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட் செய்து வருகிறது. இதில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரராக சாம் கான்ஸ்டாஸ் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிரடியாக ஆடி ரன் குவித்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, சாம் கான்ஸ்டாஸ் உடன் தோளோடு தோள் மோதினார்.

அதன் பின்னர் இருவரும் காட்டமாக வார்த்தைகளை பரிமாறிக் கொண்டனர். இத்தகைய நிகழ்வு 10-வது ஓவர் முடிந்ததும் நடந்தது. ஸ்லிப் பீல்டராக நின்ற கோலி ஒரு எண்டில் இருந்து மற்றொரு எண்டுக்கு மாறும் போது இதை செய்திருந்தார். இந்த நிலையில், டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் கான்ஸ்டாஸை தோள்பட்டையில் இடித்த விவகாரத்தில் ஐசிசி விதியை மீறியதால் கோலிக்கு 20 சதவிகிதம் அபாரதம் விதிக்கப்பட்டது. இந்திய அணி வீரர் விராட் கோலியின் தவறான நடத்தைக்கு 20 சதவிகிதம் அபராதம் விதித்துள்ளது.

The post ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலிக்கு 20% அபராதம் விதிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: