எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம்: ஆதவ் அர்ஜுனா எக்ஸ் தளத்தில் பதிவு

சென்னை: ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்துடன் எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம் என்ற கருத்தை விசிகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆதவ் அர்ஜுனா நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து 6 மாத காலத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தனது திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களிலேயே அவரது பதிவு அறிக்கையாக வெளிவந்தது. அதில், தலித் மற்றும் பிற ஒதுக்கப்பட்ட மக்களுக்காக ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்தை அந்த மக்களுக்கான அதிகாரம் கிடைக்கும் வரை தொடர்ந்து முழங்கி கொண்டே இருப்பேன் இதில் எந்த விதமான சமரசமும் இல்லை. எந்த ஒரு நம்பிக்கையோடு துணை செயலாளர் பதவியை பெற்றேனோ அந்த மனநிலையில் தான் இப்பொது இந்த நடவடிக்கையை பார்க்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த சூழலில் தற்போது அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற முழக்கத்துடன் எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆதவ் அர்ஜுனா மக்கள் சக்தியோடு விரைவில் உருவாக்குவோம் என்பது இவர் புதிய கட்சியை தொடங்குவாரா அல்லது வேறு கட்சிகளோடு இணைந்து பயணிக்க போகிறாரா என்பது அவரது மனநிலையை பொறுத்தே தெரியவரும்.

The post எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம்: ஆதவ் அர்ஜுனா எக்ஸ் தளத்தில் பதிவு appeared first on Dinakaran.

Related Stories: