சிறுதானியங்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பண்ணைப் பள்ளி

*செங்கம் அருகே நடந்தது

செங்கம் : செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியத்தில் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் மூலம் கொட்டகுளம் கிராமத்தில் சிறுதானியங்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் நடராஜன் தலைமையில் பண்ணைப்பள்ளி 6ம் வகுப்பு நடத்தப்பட்டது.

வேளாண்மை அலுவலர் உழவர் பயிற்சி நிலையம் சௌந்தர் முன்னிலை வகித்து விதைப்பண்ணை அமைப்பதால் எற்படும் நன்மைகள், வெள்ள பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுக்காக்க கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள், பயிர் காப்பீடு செய்வதால் ஏற்படும் நன்மைகள், கேழ்வரகு தானியங்களில் மதிப்புகூட்டுதல் பற்றி விவசாயிகளிடம் தெரிவித்தார்.

கிராம நிர்வாக அலுவலர் சரவணன் வெள்ள பாதிப்பு கணக்கெடுப்பு வயல் தேர்வு செய்தல் போன்ற தொழில்நுட்பங்கள் பற்றி விவசாயிகளுக்கு தெரிவித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ச.கோகிலா உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மோ.விஷ்ணு, பா.முத்து மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர். விவசாயிகளுக்கு வெள்ள பாதிப்பு மேலாண்மை தொழில்நுட்பங்கள், கேழ்வரகு பயிரில் கடைபிடிக்கவேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் விஷ்ணு நன்றி கூறினார்.

The post சிறுதானியங்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பண்ணைப் பள்ளி appeared first on Dinakaran.

Related Stories: