வலுவடைகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி டெல்டாவில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அது பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் தொடர்ந்து நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக நேற்று ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. இந்நிலையில் அந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று(10ம் தேதி) சற்று வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக இன்று கடலோரத் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யும். இதையடுத்து, தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி 11ம் தேதி மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கை- தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவும்.

அதனால், 11ம் தேதியில் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். அத்துடன் புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. 12ம் தேதியில் 20 மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். 13ம் தேதி 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
சென்னையில் இன்று பொதுவாக மேகமூட்டம் காணப்படும்.

The post வலுவடைகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி டெல்டாவில் கனமழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: