அப்பிரகடனத்தின்படி, இந்தியாவில் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 28.09.1993 அன்று நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின், சட்டப்பிரிவு 3, 21-இன்படி, இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாட்டில், திமுக ஆட்சியில்தான் மனித உரிமை மீறல் நிகழ்வுகள் எங்கும் நிகழக்கூடாது எனும் எண்ணத்துடன் 17.04.1997 அன்று ஓய்வுபெற்ற நீதியரசர் ஒருவர் தலைமையில், “தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம்” எனும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.
சட்டம், மனித உரிமைகள், கல்வி, உளவியல் மற்றும் குற்றவியல் ஆகியவற்றைத் தொடரும் மாணவர்கள், அவர்களின் பாடத் திட்டத்தின் ஒரு பகுதியான உள்பயிற்சி தொடர்பாக இந்த ஆணையத்திற்கு வருகின்றனர். இந்த மாணவர்கள், மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் இந்த ஆணையத்தின் செயல்பாட்டைப் பற்றிய தகவல்களை பரப்புவதற்கு ஊக்குவிக்கப்படுகின்றனர்.
இந்த ஆண்டிற்கான மனித உரிமைகள் நாள் கருப்பொருள் – “நமது உரிமை, நமது எதிர்காலம் இப்போது’’ என்பதை அறிவித்துள்ளது. அனைத்துத் தரப்பினருக்குமான உன்னதமான திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்தி வரும் எங்களது திராவிட மாடல் அரசு, மதம், இனம், மொழி, நிறம், அரசியல் பாகுபாடின்றி அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்திடுவதிலும் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை நிலைநாட்டிட, சுயமரியாதையைப் பாதுகாத்திட இந்த மனித உரிமைகள் நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.
The post திராவிட மாடல் அரசு, மதம், இனம், மொழி, நிறம், அரசியல் பாகுபாடின்றி அனைத்து உரிமைகளும் அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்கிறது: உலக மனித உரிமைகள் நாள் முன்னிட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிக்கை appeared first on Dinakaran.