இருப்பினும் ரஷ்யாவின் முக்கிய செய்தி முகமைகளான டாஸ், ரியான் நாவஸ்டி ஆகியவை சிரியா அதிபர் தனது குடும்பத்துடன் ரஷ்யா தலைநகர் மாஸ்க்கோவுக்கு வந்து இறங்கியுள்ளதாகவும். மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு ரஷ்யா அடைக்கலம் கொடுத்துள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளனர். அல் ஆசாத் எங்கு சென்றார் என்பதை அறிய விமானங்களை பின்தொடரும் செயலிகள் மூலம் ஏராளமானோர் முயன்று வருகின்றனர். கிளர்ச்சிப்படைகள் டமாஸ்கஸ் நகருக்குள் நுழைந்த போது அங்கிருந்து அவசரமாக புறப்பட்ட விமானம் ஒன்று சிறிது நேரத்தில் ரேடார் இணைப்பிலிருந்து மறைந்ததாக செய்திகள் கூறுகின்றன. இதற்கிடையே சிரியாவில் அல் ஆசாத் அரசுக்கு ஆதரவாக உருவாக்கப்பட்ட தங்கள் நாட்டு ராணுவ தளங்களை கிளர்ச்சியாளர்கள் தாக்காமல் இருக்க ரஷ்யா உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
The post சிரியா அதிபர் அல் ஆசாத்துக்கு புகலிடம் கொடுத்த ரஷ்யா: குடும்பத்துடன் மாஸ்கோவில் அடைக்கலம் புகுந்ததாகத் தகவல் appeared first on Dinakaran.