24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையும்

சென்னை: வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வலுவடையக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையக் கூடும். டிச.11 வாக்கில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இலங்கை – தமிழகம் கடலோரப் பகுதிகளையொட்டி நிலவக்கூடும். தமிழ்நாட்டில் நாளை முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் டிச.11, 12 ஆகிய 2 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

The post 24 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடையும் appeared first on Dinakaran.

Related Stories: