செங்கல்பட்டு, டிச. 9: செங்கல்பட்டில், உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடந்தது. தமிழகம் முழுவதும் கஞ்சா, அபின், பெத்தமெட்டமின் மற்றும் போதை மாத்திரைகள் என பல்வேறு புதுப்புது போதை வஸ்த்துகள் புழக்கத்தில் உள்ளன. அதிலும் இதில் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் வாலிபர்கள் என அவர்களை கூறி வைத்து விற்கப்பட்டு வருகிறது.
நிறைய இளைஞர்கள் மாணவர்கள் வாலிபர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீள முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதேபோல், ஆகவே வருகிற 10ம்தேதி உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு சிங்கபெருமாள் கோயில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் இருந்து போதை ஒழிப்பு மற்றும் போதைப் பொருள்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு மனித உரிமைகள் மனிதவள மேம்பாட்டு அமைப்பு மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள், நலச்சங்ககங்கள் இணைந்து சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த போதைப் பொருளுக்கான எதிர்ப்பு குரல் எழுப்பியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து, போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை நிறுத்த ஒத்துழைப்போம். சட்ட விரோதமாக உள்ள மருந்துகளை மற்றும் எந்தவொரு போதை பழக்கத்திற்கும் அடிமையாக மாட்டோம் என உறதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
The post உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு போதை பொருட்கள் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.