வேதாரண்யம், டிச.8: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டாட்சியராக சக்கரவர்த்தி பொறுப்பேற்றுக்கொண்டார். வேதாரண்யம் தாசில்தாராக சக்கரவர்த்தி நேற்று பதவி ஏற்று கொண்டார். இவர் நாகப்பட்டினம் சிபிசிஎல் நில எடுப்பு தாசில்தாராக பணியாற்றி, தற்போது பணிமாறுதல் பெற்று வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தாராக பொறுப்பேற்றுள்ளார். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட தாசில்தார் சக்கரவர்த்தியை வட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
The post மீனவர்கள் கோரிக்கை செவ்வாய்தோறும் படியுங்கள் வேதாரண்யத்தில் புதிய தாசில்தார் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.