சேந்தமங்கலம், டிச.8: சேந்தமங்கலம் ஒன்றியம், பொட்டணம் ஊராட்சி, பொட்டணம்புதூர் பெரியாண்டவர் கோயில் அருகே அரசின் கல்குவாரி உள்ளது. சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக, இந்த கல்குவாரி குட்டையில் அதிகளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த குட்டையில் குளிப்பதற்காக சென்ற ராசிபுரத்தைச் சேர்ந்த தொழிலாளி மணிகண்டன் தவறி விழுந்து உயிரிழந்தார். மேலும், அந்த கல்குவாரியில், அப்பகுதியை சேர்ந்த கல் உடைக்கும் தொழிலாளர்கள் குளித்துவிட்டு துணிகளை துவைத்து செல்வது வழக்கம். தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கல்குவாரி குட்டையில் குளிக்க வருவாய் துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் அந்த குட்டைக்குச் செல்ல ஊராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post குவாரி குட்டையில் குளிக்க தடை விதிப்பு appeared first on Dinakaran.