நாமக்கல் டிச.11: நாமக்கல்லில், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட மாநாடு நடைபெற்றது. நாமக்கல்லில், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட மாநாடு தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கோவை மண்டல செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன், தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்தார். மாநாட்டில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பத்து ரூபாய் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் விஸ்வராஜ், விவசாய முன்னேற்றக் கழக மாநில பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன், சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுனர்கள் சங்கம் பத்மராஜ், அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், உழைப்பாளர் கலைக்கூடம் மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், தொழிற்சங்கத்தின் மாநில பொருளாளர் சாமிவேல், மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post தொழிலாளர் சங்க மாவட்ட மாநாடு appeared first on Dinakaran.