அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கு வரும் 14ம் தேதி கணினி வழித்தேர்வு: ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு

சென்னை: அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான கணினி வழித்தேர்வு வருகிற 14ம் தேதி நடக்கிறது. இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அரசு உதவி வழக்கு நடத்துநர் (கிரேடு 2) பதவிக்கான கணினி வழித் தேர்வை வருகிற 14ம் தேதி பிற்பகலில் நடத்த உள்ளது. இத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் (ஹால் டிக்கெட்) தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது. இத்தகவலை டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார்.

The post அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கு வரும் 14ம் தேதி கணினி வழித்தேர்வு: ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: