பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஷார்ட் சர்க்யூட் என்ற வகையில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. ஒருவருக்கு மட்டும் 10 சதவீதம் தீக்காயம் காலில் ஏற்பட்டுள்ளது. 6 பேர் தாங்களாகவே லிப்டில் பயணம் செய்துள்ளனர். அப்போது அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே 6 பேரும் உயிரிழந்தனர். 35 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 4 பேர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு தனியார் மருத்துவமனையில் எந்தெந்த வசதிகள் இருக்க வேண்டுமோ, அது குறித்து காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி காட்சிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. தனியார் மருத்துவமனைக்கு உள்ள விதிகளை பின்பற்றாமல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையினர் முழு அறிக்கை கொடுத்தவுடன் எந்த மாதிரியான விதி மீறல்கள் உள்ளது என ஆய்வு செய்யப்படும்’’ என்றார்.
The post விதிகளை பின்பற்றாமல் இருந்தால் சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி appeared first on Dinakaran.