ரூ.1.85 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

 

மொடக்குறிச்சி, டிச.8: அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. இந்த, ஏலத்தில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 11 ஆயிரத்து 755 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.37.99 காசுக்கும், அதிகபட்ச விலையாக ரூ.53.91 காசுக்கும், சராசரி விலையாக ரூ.50.99 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 3,989 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்து 203க்கு விற்பனை நடைபெற்றது.

The post ரூ.1.85 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் appeared first on Dinakaran.

Related Stories: