தெப்பக்காட்டில் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்

 

கூடலூர், டிச.11: முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் ஊட்டி-கூடலூர்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து மசினகுடி வழியாக செல்லலாம். இந்த ஊட்டி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் மாயாற்றின் மீது கட்டப்பட்டிருந்த நூற்றாண்டு பழமையான பாலம் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டு புதிய பாலம் அமைக்கும் பணிகள் துவங்கியது. மிகவும் தாமதமாக பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தற்போது பாலத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பாலத்தின் மேற்புறம் போடப்பட்டுள்ள கான்கிரீட் தளத்தின் மேல் பகுதியில் பாதுகாப்பு சிமெண்ட் லேயர் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதையடுத்து பணிகள் நிறைவடைந்து 2025ம் ஆண்டு துவக்கத்தில் பாலம் வாகன போக்குவரத்துக்கு திறக்கப்படலாம் என அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

The post தெப்பக்காட்டில் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க இறுதிக்கட்ட பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: