பின் முதல் இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து வீரர்கள் இங்கிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 86 ரன் மட்டுமே எடுத்து தடுமாறிக் கொண்டிருந்த நியூசிலாந்து வீரர்கள் 2ம் நாளான நேற்றும் மோசமான ஆட்டத்தை வௌிப்படுத்தினர். 35வது ஓவரில், அணியின் ஸ்கோர் 125 ஆக இருந்தபோது, நியூசிலாந்து அணியின் கடைசி 3 விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்து ஆட்டம் முடிவுக்கு வந்தது.
பின், இங்கிலாந்து 2ம் இன்னிங்சை துவக்கியது.
ஜாக் கிராவ்லி 8ல் அவுட்டானார். ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 378 ரன் குவித்து மிக வலுவான நிலையில் உள்ளது. அந்த அணியின் ஜோ ரூட் 73, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 35 ரன்னுடன் களத்தில் உள்ளனர். 2ம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 533 ரன் முன்னிலை பெற்று வெற்றிப் படிக்கட்டின் அருகே சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளது. இன்னும் 3 நாள் மீதமுள்ளதால் இங்கிலாந்து அணி வெற்றி வாகை சூடுவதை தடுப்பது எளிதல்ல. இன்று 3ம் நாள் ஆட்டம் நடக்கவுள்ளது.
The post தொட்டு விடும் துாரத்தில் வெற்றிப் படிக்கட்டு: இங்கிலாந்து 533 ரன் முன்னிலை: 2ம் நாளில் 125ல் சுருண்ட நியூசி. appeared first on Dinakaran.