இடைப்பாடி அருகே மாஜி ராணுவவீரர் கார் மோதி பலி

சேலம், டிச.7: சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகேயுள்ள எர்ணாபுரம் கிராமம் அழகனூரை சேர்ந்தவர் கந்தசாமி மகன் பாலாஜி (46) முன்னாள் ராணுவவீரர். 17 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பணியாற்றிவிட்டு, விருப்ப ஓய்வு பெற்று திரும்பிய அவர், மேட்டூர் தெர்மல் நிலையத்தில் தனியார் ஒப்பந்த காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர், கடந்த 4ம் தேதி மதியம் ெசாந்த வேலை காரணமாக இடைப்பாடிக்கு தனது பைக்கில் சென்றார். பின்னர் இரவு 8 மணியளவில் வீட்டுக்கு திரும்ப இடைப்பாடி-கொங்கணாபுரம் சாலையில் பைக்கில் வந்துகொண்டிருந்தார். கரட்டுவளவு பகுதியில் முருகேசன் என்பவரது விவசாய தோட்டம் அருகே வந்தபோது, பின்னால் வேகமாக வந்த கார், பாலாஜியின் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பாலாஜிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இவ்விபத்து பற்றி தகவல் அறிந்த கொங்கணாபுரம் போலீசார், சம்பவ இடம் சென்று மாஜி ராணுவவீரர் பாலாஜியின் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். தொடர்ந்து அவரது மனைவி சங்கீதா கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்தனர்.

The post இடைப்பாடி அருகே மாஜி ராணுவவீரர் கார் மோதி பலி appeared first on Dinakaran.

Related Stories: