வாகனம் மோதி விவசாயி பலி

ஓமலூர், டிச. 7: தாரமங்கலம் அருகேயுள்ள எலவம்பட்டி கிராமம், பூசாரியூரை சேர்ந்தவர் நல்லதம்பி(71). விவசாயியான இவர், ஓமலூர் அருகே ஊமகவுண்டம்பட்டியில் உள்ள உறவினரின் துக்க காரியத்திற்கு சென்றுவிட்டு, தனது டூவீலரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். காமலாபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகே, சர்வீஸ் சாலையில் வந்த போது, பின்னால் வந்த வாகனம் ஒன்று, அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த நல்லதம்பி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், நல்லதம்பியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வாகனம் மோதி விவசாயி பலி appeared first on Dinakaran.

Related Stories: