புனே: 12 அணிகள் பங்கேற்றுள்ள 11வது புரோ கபடி லீக் தொடர் போட்டிகள் புனேவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 93வது லீக் போட்டியில் தபாங் டெல்லி-யு.பி.யோத்தா மோதின.விறுவிறுப்பாக நடந்த இந்தபோட்டி 32-32 என சமனில் முடிந்தது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-யு.மும்பா மோதின. கடைசி ரெய்டுவரை த்ரிலாக சென்ற இந்த போட்டியும் 22-22 என டையில் முடிந்தது. இன்று இரவு 8 மணிக்கு தமிழ்தலைவாஸ்-குஜராத் ஜெயன்ட்ஸ் மோதுகின்றன.
15 போட்டியில் 5 வெற்றி, 9 தோல்வி, ஒரு டை என 33 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ள தமிழ்தலைவாஸ் மீதமுள்ள 7 போட்டியிலும் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற நெருக்கடியில் உள்ளது. இரு அணிகளும் இதற்கு முன் 11 முறை மோதியதில் 6ல் குஜராத், 4ல் தமிழ்தலைவாஸ் வென்றுள்ளன. ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. நடப்பு சீசனில் கடந்த அக்.30ம் தேதி மோதிய போட்டியில் தமிழ்தலைவாஸ் 44-25 என வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இரவு 9 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ்-பாட்னா பைரேட்ஸ் மோதுகின்றன.
The post வெற்றி நெருக்கடியில் தமிழ்தலைவாஸ்: குஜராத்துடன் இன்று பலப்பரீட்சை appeared first on Dinakaran.