ஃபெஞ்சல் புயலின் காரணமாக பெய்த மழையால் சென்னை குடிநீர் ஏரிகளின் நிலவரம்..!

சென்னை: ஃபெஞ்சல் புயலின் காரணமாக பெய்த மழையால் சென்னை குடிநீர் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து நீர் இருப்பு 8 டி.எம்.சியானது. கடந்த 6 நாட்களில் சென்னை குடிநீர் ஏரிகளுக்கு 2.6 டி.எம்.சி. நீர்வரத்து இருந்துள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 5.599 டி.எம்.சி.யாக இருந்த நீர் இருப்பு இன்று 8.285 டி.எம்.சி.யாக உயர்ந்துள்ளது. கடந்த 30-ம் தேதி 5 ஏரிகளில் 47.62% நீர் நிரம்பியிருந்த நிலையில் இன்று 70.47% நீர் இருப்பு உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து நேற்று விநாடிக்கு 25,098 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை விநாடிக்கு 14,404 கன அடியாக குறைந்துள்ளது.

டெல்டா பாசனத்திற்காகவும், கால்வாய் வழியேவும் விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர் மட்டம் 115.32 அடியாகவும், நீர் இருப்பு 86.20 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. சென்னை நகரின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் 5 முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் 8 மாதங்களுக்கு பின் 8 டி.எம்.சி.யை எட்டியது. கடந்த 6 நாட்களில் மட்டும் 5 ஏரிகளுக்கு 2.6 டி.எம்.சி. நீர் வந்துள்ளது.

தேவையான நீர் உள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 4,500 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. 7.3 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட அணையில் நீர் இருப்பு 7.08 டி.எம்.சி. ஆக தற்போது உள்ளது. 119 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 117.95 அடி அளவுக்கு நீர் நிரம்பியுள்ளது. நீர்வரத்து 4,500 கன அடியாக உள்ள நிலையில், அதே அளவுக்கு நீர் திறந்து விடப்படுகிறது.

 

The post ஃபெஞ்சல் புயலின் காரணமாக பெய்த மழையால் சென்னை குடிநீர் ஏரிகளின் நிலவரம்..! appeared first on Dinakaran.

Related Stories: