சென்னை அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சில மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டார். மாணவி வன்கொடுமை வழக்கை மறைக்க வேண்டிய அவசியம் திமுக அரசுக்கு இல்லை. கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுகவை சேர்ந்தவர் என பொய் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. ஞானசேகரன் திமுகவின் அடிப்படை உறுப்பினர்கூட இல்லை. யார் வேண்டுமானாலும் வந்து புகைப்படம் எடுத்து கொள்ளலாம்; அமைச்சர்களை மக்கள் சந்திப்பதை தடுக்க முடியாது. விசாரணை துரிதமாக நடைபெற்று வருகிறது; தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி சம்பவத்தை மறைக்க அப்போதைய அதிமுக அரசு முயற்சி செய்தது. ராமேஸ்வரத்தில் உடை மாற்றும் அறையில் கேமரா வைத்த விவகாரத்தில் கைதானவர் அதிமுக பிரமுகரின் மகன். பொள்ளாச்சி சம்பவத்தில் அதிமுகவை சேர்ந்த முக்கிய பிரமுகரின் மகன் ஈடுபட்டிருந்ததால் அதை மறைக்க முயற்சி செய்தனர். இந்தியாவிலேயே உயர்கல்வி படிக்கும் பெண்கள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் குறைவு என்கிறது மத்திய அரசு தரவுகள்.பாஜக ஆளும் மாநிலங்களில்தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. மல்யுத்த வீராங்கனைக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டது; அதற்கு ஆதரவாக பாஜக அரசு செயல்பட்டது,”இவ்வாறு தெரிவித்தார்.
The post பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை மறைக்க அப்போதைய அதிமுக அரசு முயற்சி செய்தது : அமைச்சர் ரகுபதி விளக்கம் appeared first on Dinakaran.