ஃபெஞ்சல் புயல்; சென்னை குடிநீர் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு!

சென்னை: ஃபெஞ்சல் புயலின் காரணமாக பெய்த மழையால் சென்னை குடிநீர் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து நீர் இருப்பு 8 டி.எம்.சியானது. கடந்த 6 நாட்களில் சென்னை குடிநீர் ஏரிகளுக்கு 2.6 டி.எம்.சி. நீர்வரத்து இருந்துள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 5.599 டி.எம்.சி.யாக இருந்த நீர் இருப்பு இன்று 8.285 டி.எம்.சி.யாக உயர்வு. கடந்த 30-ம் தேதி 5 ஏரிகளில் 47.62% நீர் நிரம்பியிருந்த நிலையில் இன்று 70.47% நீர் இருப்பு உள்ளது.

 

The post ஃபெஞ்சல் புயல்; சென்னை குடிநீர் ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு! appeared first on Dinakaran.

Related Stories: