×

புயல் பாதிப்பு சீரமைப்பு பணியில் இருந்த மின் ஊழியர் சாவு

பண்ருட்டி, டிச. 6: விருத்தாசலம் அருகே பொன்னேரி கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(55). இவர் மருங்கூர் உதவி மின் பொறியாளர் பிரிவில் முதல் நிலை முகவராக (போர் மேன்) பணிபுரிந்து வந்தார். இவர் பண்ருட்டி அருகே திருவாமூர் சமத்துவபுரம் காமாட்சி பேட்டை பகுதியில் மின் ஊழியர்களுடன் புயல் சேத சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து தகவலின் பேரில், காடாம்புலியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புயல் பாதிப்பு சீரமைப்பு பணியில் இருந்த மின் ஊழியர் சாவு appeared first on Dinakaran.

Tags : Panruti ,Balakrishnan ,Ponneri village ,Vridthachalam ,Marungur ,Thiruvamur Samathuvapuram Kamatchi Pettai ,Dinakaran ,
× RELATED கண்காணிப்பு கேமராவுடன் பறந்து வந்த கழுகு