பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள சித்திரை சாவடி கிராமத்தில் உள்ள காமன் கோயில் அருகே தகர செட்டின் மீது நேற்று காலை பெரிய கழுகு ஒன்று பறந்து வந்து அமர்ந்தது. அந்த கழுகின் முதுகு பகுதி முன் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. இதை அறிந்து கிராம மக்கள் திரண்டனர். இதுகுறித்து புதுப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கழுகு எங்கிருந்து வந்தது, யார் அனுப்பினார்கள், அதில் உள்ள கேமரா எத்தகைய செயலுக்காக அனுப்பப்பட்டது என்பதை அறிய வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நீண்ட நேரம் ஆகியும் வனத்துறையினர் வரவில்லை. இதையடுத்து கழுகு அங்கிருந்து பறந்து சென்றுவிட்டது.
The post கண்காணிப்பு கேமராவுடன் பறந்து வந்த கழுகு appeared first on Dinakaran.