- சின்னா சேலம்
- நிர்வாக அதிகாரி
- Kachirayapalayam
- வடகனேந்தல் மேற்கு கிராமம்
- வடகானேந்தல்
- சின்னசேலம் தாலுகா
- தின மலர்
சின்னசேலம், டிச. 18: கச்சிராயபாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலரை அலுவலகத்தில் வைத்து உதவியாளர் பூட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சின்னசேலம் தாலுகா வடக்கநந்தல் குறுவட்டத்துக்கு உட்பட்ட வடக்கநந்தல் மேற்கு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் தமிழரசி. இவருக்கு உதவியாளராக அதே பகுதியை சேர்ந்த சங்கீதா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 2 மாதங்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் கிராம நிர்வாக அலுவலர் தமிழரசி அலுவலகத்தில் இருந்துள்ளார். அப்போது கிராம உதவியாளர் சங்கீதா, அலுவலர் தமிழரசியை உள்ளே வைத்து பூட்டிவிட்டு, தனது மொபட்டை எடுத்து செல்வது போலவும், அப்போது கிராம நிர்வாக அலுவலர் கதவை திறந்து விடுமா என்று கெஞ்சுவது போலவும் சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வந்தது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உத்தரவின் பேரில் சின்னசேலம் வட்டாட்சியர் மனோஜ்முனியன் நடந்த சம்பவம் குறித்து வருவாய் ஆய்வாளர் சுமதி, கிராம நிர்வாக அலுவலர் தமிழரசி ஆகியோரிடம் விளக்கம் கேட்டு விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post விஏஓவை அலுவலகத்தில் வைத்து பூட்டிய உதவியாளர் appeared first on Dinakaran.