பண்ருட்டி, டிச. 25: கண்காணிப்பு கேமராவுடன் வந்த கழுகால் பண்ருட்டி அருகே பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்துள்ள சித்திரை சாவடி கிராமத்தில் உள்ள காமன் கோயில் அருகே உள்ள தகர செட்டின் மீது நேற்று காலை பிரம்மாண்டமான கழுகு ஒன்று பறந்து வந்து அமர்ந்தது. அந்த கழுகின் முதுகு பகுதி முன் பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. இந்த செய்தி காட்டு தீ போல கிராமம் முழுவதும் பரவியதையடுத்து அங்கு பொதுமக்கள் திரண்டனர். இதுகுறித்து புதுப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில், புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கழுகு எங்கிருந்து வந்தது, யார் அனுப்பினார்கள், அதில் உள்ள கேமரா எத்தகைய செயலுக்காக அனுப்பப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்த வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து காத்திருந்தனர். நீண்ட நேரம் ஆகியும் வனத்துறையினர் வராததால் கழுகு அங்கிருந்து பறந்து சென்றது.
இதனால் போலீசார் செய்வதறியாமல் இருந்தனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post கண்காணிப்பு கேமராவுடன் வந்த கழுகு appeared first on Dinakaran.