×

நெல்லிக்குப்பத்தில் பட்ட பகலில் துணிகரம் திறந்திருந்த வீட்டில் புகுந்து 6 பவுன் நகை, ₹2 லட்சம் பணம் திருடிய மர்ம ஆசாமிகள்

நெல்லிக்குப்பம், டிச. 21: நெல்லிக்குப்பத்தில் திறந்து இருந்த வீட்டில் 6 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் சுதாகர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகூரான் மகன் கிருஸ்துராஜ் (40). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நேற்று காலை கிருஸ்துராஜ் வீட்டின் கதவுகளை திறந்து வைத்துவிட்டு ஹாலிலும், மகள் ரக்ஷிதா பெட்ரூமிலும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கிருஸ்துராஜின் மனைவி இந்திரா வீட்டின் கதவை பூட்டாமல் திறந்து வைத்துவிட்டு வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க கடைக்கு சென்றுவிட்டார். இதனால் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம ஆசாமிகள் வீட்டுக்குள் புகுந்து படுக்கை அறைக்கு சென்றனர்.

அப்போது பீரோவில் சாவி இருந்ததால் திறந்து உள்ளே இருந்த நெக்லஸ், செயின் உள்ளிட்ட 6 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சம் பணத்தையும், விலை உயர்ந்த ஒரு செல்போனையும் திருடிக்கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து கிருஸ்துராஜ் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்ட பகலில் திறந்திருந்த வீட்டில் தங்க நகைகள் மற்றும் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post நெல்லிக்குப்பத்தில் பட்ட பகலில் துணிகரம் திறந்திருந்த வீட்டில் புகுந்து 6 பவுன் நகை, ₹2 லட்சம் பணம் திருடிய மர்ம ஆசாமிகள் appeared first on Dinakaran.

Tags : Nellikuppam ,Nagooran ,Sudhakar Nagar ,Cuddalore ,Dinakaran ,
× RELATED லாரி,வேன் மோதலில் 5 பேர் படுகாயம்