குன்னூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் இறங்கிய அரசு பேருந்து

குன்னூர், டிச.5: குன்னூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இதனால் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் பயணிகள் உயிர் தப்பினர். நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராம பகுதிகளுக்கும் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை நேரத்தில் சோல்ராக் கிராமத்திலிருந்து 33 பயணிகளை ஏற்றிக்கொண்டு, அரசு பேருந்து குன்னூரை நோக்கி வந்தது.

அப்போது சேலாஸ் அருகேகரும்பாலம் பகுதியில் ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, சாலையில் தடுப்பு சுவரை இடித்துக்கொண்டு, மோதி மரத்தின் மீது மோதிய நிலையில் பள்ளத்தில் இறங்கியது. இதனால் பேருந்தில் உள்ள பயணிகள் அலறி அடித்து கூச்சலிட்டனர். இருப்பினும் பேருந்தில் பயணித்த பயணிகள் லேசான சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும் பயணிகள் அனைவரையும் மாற்று பேருந்தில் மூலம் குன்னூருக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக கொலக்கம்பை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பயணிகள் உயிர் தப்பினர்

The post குன்னூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் இறங்கிய அரசு பேருந்து appeared first on Dinakaran.

Related Stories: