தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு: இஸ்ரோ அறிவிப்பு

ஆந்திரா: சூரியனின் ஒளிவட்டப் பாதையை ஆய்வு செய்வதற்கான பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைத்துள்ளனர். ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் புரோபா-3, கரோனா கிராப் ஆகிய செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட இருந்தன. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பி.எஸ்.எல்.வி. சி.59 ராக்கெட் ஏவுதல் திட்டத்தை நாளைக்கு ஒத்திவைப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நாளை மாலை 4.12 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

புரோபா3 செயற்கைக்கோளை சுமந்தபடி பிஎஸ்எல்வி சி59 ராக்கெட் விண்ணில் பாய்ந்து சூரியனின் ஒளிவட்ட பகுதியில் ஆய்வு செய்யும். அதன்படி, செயற்கைகோள் மூலமாக சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்து தரவுகளை அனுப்பும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பல்வேறு விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, கடந்த ஆண்டு சந்திரயான் 3, ஆதித்யா எல்1 ஆகிய திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி உலகை திரும்பி பார்க்க வைத்தது.

இஸ்ரோ தனது தனித்துவ திட்டங்கள் மற்றும் செயற்கோள்களை விண்ணில் ஏவுவதோடு மட்டும் இல்லாமல், தனியார் செயற்கைக்கோள் மற்றும் வெளிநாட்டு செயற்கைகோள்களையும் விண்ணில் செலுத்துகிறது. இதற்காக இந்திய விண்​வெளி ஆய்வு மையத்​தின் கீழ் செயல்​படும் நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறு​வனம் வெளி​நாட்டு செயற்​கைக்​கோள்களை விண்​ணுக்கு அனுப்பும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்​கொண்டு வருகிறது.

அதன்படி இதுவரை 430க்​கும் மேற்​பட்ட வெளி​நாட்டு செயற்​கைக்​கோள்களை நியூ ஸ்பேஸ் நிறு​வனம் வெற்றிகரமாக விண்​ணில் செலுத்​தி​யுள்​ளது.பெரும்​பாலான உலக நாடு​களின் விண்​வெளி ஆய்வு நடவடிக்கைகளுக்கு இஸ்ரோ பங்களித்து வரும் நிலை​யில், அண்மை​யில் ஐரோப்பிய விண்​வெளி ஆய்வு நிறு​வனத்​துடன் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறு​வனம் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்​கொண்​டது.

அதன்​படி, புரோபா3 என்று பெயரிடப்பட்ட இணை செயற்கைகோளை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த செயற்கைகோள்கள் சூரியனின் ஒளிவட்டப் பகுதியை ஆய்வு செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 550 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஏவுதளமான, ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை 4.08 மணிக்கு பிஎஸ்எல்வி சி59 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் சூரியனின் ஒளிவட்டப் பாதையை ஆய்வு செய்வதற்கான பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் ஏவுதலை இஸ்ரோ நாளைக்கு ஒத்திவைத்துள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பி.எஸ்.எல்.வி. சி.59 ராக்கெட் ஏவுதல் திட்டத்தை நாளைக்கு ஒத்திவைப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நாளை மாலை 4.12 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

The post தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பி.எஸ்.எல்.வி. சி-59 ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு: இஸ்ரோ அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: