இதனால் தென்பெண்ணையாறு, கெடிலம் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஃபெஞ்சல் புயலானது இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கடும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. பல கிராமங்கள், முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்தது. தமிழ்நாட்டில் பெஞ்சல் புயல் ஏற்படுத்திய தாக்கம் இன்னமும் ஓயவில்லை. பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு நிலை திரும்பவில்லை. உணவு, குடிநீர் கேட்டும், மீட்பு பணிகளை துரிதப்படுத்த கோரியும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு ஆதரவளிப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது; ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும் தமிழ்நாட்டு மக்களுடம் எங்களின் எண்ணங்கள் உள்ளன. இந்த சவாலான நேரத்தில் அண்டை மாநிலத்துடன் கேரளம் உறுதுணையாக நிற்கிறது. தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய கேரளம் தயாராக உள்ளது. ஒன்றிணைந்து இதிலிருந்து மீள்வோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
The post தமிழ்நாட்டுக்கு உறுதுணையாக இருப்போம்; ஒன்றிணைந்து இதிலிருந்து மீள்வோம்: கேரள முதல்வர் பினராயி விஜயன்!! appeared first on Dinakaran.