புதுக்கோட்டை,டிச.3: மிளகாய் தென்கிழக்கு ஆசிய கரும்பேன் விழிப்புணர்வு பிரச்சாரம் உழவர் சந்தையில் நடைபெற்றது எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வேளாண்மை வணிகம் மற்றும் விற்பனைத்துறை இணைந்து நடத்திய மிளகாய் தென்கிழக்கு ஆசிய கரும்பேன் விழிப்புணர்வு பிரச்சாரம் புதுக்கோட்டை உழவர் சந்தையில் நடைபெற்றது. நிகழ்விற்கு எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி.ராஜ்குமார் தலைமை வகித்தார். தனது தலைமையுரையில் மிளகாய் தென்கிழக்கு ஆசிய கரும்பேன் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் ஓர் புலம்பெயர் பூச்சியாகும். இந்த பூச்சி 2021-ல் ஆந்திரா மாநிலத்தில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இந்த கரும்பேன் தாக்குதல் தொடங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கரும்பேன் தாக்குதலால் 80 சதவிகிதம் முதல் 95 சதவிகிதம் வரை விளைச்சல் இழப்பை ஏற்படுத்தும். பூக்கள் மற்றும் இலைகளின் பின்புறத்தில் வெள்ளி பேன்ற பளபளக்கும் திட்டுகள், மேல்நோக்கி சுருண்ட இலைகள், ஒழுங்கற்ற சொரசொரப்பான மேற்புறம் கொண்ட காய்கள் பேன்றவை கரும்பேன் தாக்குதலின் அறிகுறிகளாகும். இந்த கரும்பேன் தாக்குதலின் அறிகுறிகளையும் விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விளம்பர வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விபரங்களை விவசாயிகள் தெரிந்து கொள்வதால் மகசூல் இழப்பை தவிர்க்கமுடியும் என்றார். கரும்பேன் அறிகுறிகள் தென்பட்டால் எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன விவசாயிகள் உதவி எண்களில் 9942211044, 7299935543 தொடர்பு கொண்டு தடுப்பு நடவடிக்கைகளை தெரிந்து கொள்ளலாம்.
விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 2500 விவசாயிகள் அலைபேசியில் கேபி டிஜிட்டல் செயலிகளை பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த பிரச்சார வாகனம் 20 கிரமங்களுக்கு சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளும் என்றார். வேளாண்மை மற்றும் விற்பனைத்துறை துணை இயக்குநர்.ஜெகதீஸ்வரி விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை துவக்கி வைத்து உறையாற்றினார். எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கேபி ஏற்பாடு செய்துள்ள இந்த பிரச்சாரம் தென்கிழக்கு ஆசிய கரும்பேனினால் மிளகாயில் ஏற்படும் பாதிப்புகளை தெரிந்து கொண்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கெள்ள உதவியாய் இருக்கும் என்றார்.
நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேளாளர்.தீபக்குமார், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர்.வீரமுத்து, மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத் தலைவர்.சதாசிவம், ஆகியோர் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் அவசியத்தை விளக்கி பேசினர். நிகழ்ச்சியில் தென்கிழக்கு ஆசிய கரும்பேன் பாதிப்புகளை விளக்கி பிரச்சார வாகன கண்காட்சி, பயிர் மருத்துவமுகாம், கேபி டிஜிட்டல் டூல்ஸ் ஆகிய விழிப்புணர்வு செயல் விளக்க நிகழ்வுகள் நடைபெற்றது. எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ப.மணிகண்டன் அனைவரையும் வரவேற்றார். கள ஒருங்கிணைப்பாளர்.விமலா நன்றி கூறினார்.
The post புதுக்கோட்டையில் தென்கிழக்கு ஆசிய கரும்பேன் விழிப்புணர்வு பிரச்சார பேரணி appeared first on Dinakaran.