பின்பக்க சுவற்றில் துளையிட்டு தாமரைப்பாக்கம் டாஸ்மாக்கில் மதுபாட்டில்கள் கொள்ளை

ஊத்துக்கோட்டை: தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் சுவற்றில் துளையிட்டு மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள தாமரைப்பாக்கம்-செங்குன்றம் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு சூபர்வைசர் தேவேந்திரன் மற்றும் விற்பனையார்கள் 3 பேர் கடையை பூட்டிவிட்டு சென்றனர். அப்போது அந்த பகுதியில் கனமழை பெய்ததால் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. நேற்று பிற்பகல் கடையை திறந்து உள்ளே சென்றபோது பின்பக்க சுவற்றில் பெரிய துளையிடப்பட்டு இருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் 14 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 672 குவார்ட்டர் மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாந்தி, வெங்கல் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் போலீசாருடன் சென்று சோதனை நடத்தினர். கரன்ட் இல்லாத காரணத்தால் டாஸ்மாக் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர்கள் உருவம் பதிவாகவில்லை என்று தெரிகிறது. இதுசம்பந்தமாக நேற்று, சூபர்வைசர் கொடுத்த புகாரின்படி, வெங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post பின்பக்க சுவற்றில் துளையிட்டு தாமரைப்பாக்கம் டாஸ்மாக்கில் மதுபாட்டில்கள் கொள்ளை appeared first on Dinakaran.

Related Stories: